/* */

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை
X

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை .ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு முதல் நாளான இன்று, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பெண்கள் அதிகாலையிலேயே கோவில் வளாகத்திற்கு வந்து பங்கேற்றனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு 108 போற்றிகள் துதி பாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்த மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வருவதால், மார்கழிப்பனி காலத்தில் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கான வழிவகை உண்டு இந்த காற்றை சுவாசிப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தாகும். மேலும், இந்த மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலேயே திருவிளக்கு வழிபாடு நடைபெறும்.

இந்த நாட்களில் அம்மனிடம் குழந்தை வரம் வேண்டியும் திருமணம் வேண்டியும் வேண்டிக் கொள்பவர்களுக்கு நிச்சயம் கைகூடும் என்பது ஐதீகம் ஆகும். திண்டுக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஆன கோட்டை மாரியம்மன் கோவில் கடந்த 50 ஆண்டுகளாக இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.

Updated On: 16 Dec 2021 2:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்