/* */

பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு அபராதம்

தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்

HIGHLIGHTS

பேருந்து நிலையத்தில்  பிளாஸ்டிக்  பைகள் பறிமுதல்:  கடை உரிமையாளருக்கு அபராதம்
X

திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தனர்

திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு 30 ஆயிரம் வரை அபதாரம் விதித்தனர்.

தடை செய்த பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது என அரசு அறிவித்து உள்ளது.இதையடுத்து திண்டுக்கல் பகுதியில் கேரி பைகள், மெழுகு கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள், உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதுடன் ஹோட்டல்களில் பார்சலுக்கு சாம்பார், ரசம் போன்ற சூடான பொருட்களை பிளாஸ்டிக் பையில் கட்டித்தர படுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சிவராம பாண்டியன் தலைமையில் உணவு துறை அதிகாரிகள் இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதி முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்,

அப்போது, உணவு கூடங்களில் சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்கள் பார்சல் தருவதற்கு வைத்திருந்த, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் உடைந்துபோன முட்டைகளில் ஆம்லெட் போன்றவற்றை தயாரித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து முட்டைகளையும் அப்புறப்படுத்தினர். அதேபோல் டீக்கடைகள், மிச்சர் கடைகளில் ஆய்வு செய்ததில் அங்கு வைத்திருந்த ஏராளமான கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன இதையடுத்து தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்,

Updated On: 8 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு