/* */

கொரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைப்பு
X

திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் சிகிச்சை மையம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திலிருந்து படிபடியாக உயர்ந்து தற்போது சராசரியாக 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா தொற்றை போலவே ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

மாவட்டத்தில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2900 படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளது.

தற்போது 3-ம் அலையில் தொற்று தீவிரம் காட்டி வருவதால் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரியில் ஏற்கனவே கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்ட நிலையில் தற்போது 180 படுக்கை வசதிகளுடன் கூடிய மையம் தயார் நிலையில் உள்ளது.

மேலும் திண்டுக்கல் பழைய நீதிமன்ற கட்டிடம் பின்புறம் கொரோனா சிகிச்சை மையம் தயார்நிலையில் உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தினசரி பாதிப்பு சராசரியாக 100-ஐ தாண்டி வருவதால் இன்னும் ஓரிரு நாளில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டு நிறைந்துவிடும்.

இதனை கருத்தில் கொண்டு கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைக்கவும், அங்கு பணியாற்ற மருத்துவர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை நியமனம் செய்யும் பணியிலும் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Updated On: 17 Jan 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...