/* */

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவது மருத்துவ வழிகாட்டுதலுக்கு எதிரானது

தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களையும் பொறுப்பாக்குவதை கைவிட வேண்டும்

HIGHLIGHTS

வீடு வீடாக சென்று தடுப்பூசி  செலுத்துவது மருத்துவ வழிகாட்டுதலுக்கு எதிரானது
X

திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு மாநில தலைவர் நிர்மலா

வீடு வீடாக சென்று தடுப்பூசி என்பது மருத்துவ வழிகாட்டுதலுக்கு எதிரானது. நடைமுறை சிரமமும் சிக்கலும் நிறைந்தது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை பெருந்திரள் முறையீடாக மனு கொடுத்துள்ளதாக கிராம செவிலியர் சங்க மாநிலத் தலைவி நிர்மலா தெரிவித்தார்.

திண்டுக்கல் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரிடம் பெருந்திரள் முறையீடு மனு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு மாநில தலைவர் நிர்மலா அளித்த பேட்டி:,

கொரோனா தடுப்பூசி முகாமினை வெள்ளி அல்லது சனிக்கிழமை நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று தடுப்பூசி என்பது மருத்துவ வழிகாட்டுதலுக்கு எதிரானது. நடைமுறை சிரமமும் சிக்கலும் நிறைந்தது. எனவே தயவுசெய்து பொது இடங்களில் குழுவாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களையும் பொறுப்பாக்குவது, மெமோ உள்ளிட்ட தண்டனை வழங்குவதையும் ரத்து செய்ய வேண்டும். மே மாதம் நடத்த வேண்டிய கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பகுதி சுகாதார செவிலியர் பதவி உயர்விற்கான நேர்காணலா உடனடியாக நடத்தப்பட வேண்டும்.கொரோனா தடுப்பூசி மணிக்கு கூடுதல் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Updated On: 18 Nov 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!