/* */

மணல் கொள்ளையை தடுத்த விவசாயிக்கு கொலை மிரட்டல் பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகளிடம் புகார் அளித்த விவசாயி செல்வ முருகனுக்கு கொலை மிரட்டல் வந்ததால், உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு தனது மகனுடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மணல் கொள்ளையை தடுத்த விவசாயிக்கு கொலை மிரட்டல்  பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார்
X

மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகளிடம் புகார் அளித்த விவசாயி செல்வ முருகனுக்கு கொலை மிரட்டல் வந்ததால், உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.



திண்டுக்கல்:

மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகளிடம் புகார் அளித்த விவசாயி செல்வ முருகனுக்கு கொலை மிரட்டல் வந்ததால், உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு தனது மகனுடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக ஆறு ஏரி மற்றும் குளங்களில் மண் மற்றும் மணல் எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் ஏரி, குளம் மற்றும் கண்மாய்களில் மண் எடுப்பதற்கு தடைவிதித்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா பொறுப்பேற்ற நாள் முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் மண் மற்றும் மணல் கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில், மீண்டும் தற்போது அனைத்து பகுதிகளிலும் மண் மற்றும் மணல் கொள்ளை தலைதூக்க தொடங்கியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருநாத நாயக்கனூரில் வசிப்பவர் செல்வ முருகன். அதே பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது நிலத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு குளத்தில் சிலர் தொடர்ந்து ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் டிராக்டர், டிப்பர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அருகே இருந்த விவசாயி ஒருவர் படமெடுத்து செல்வ முருகனுக்கு அனுப்பி உள்ளார். செல்வமுருகன் உடனடியாக அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வட்டாட்சியர் காவல் துறையினர் அனைவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை அதற்கு மாறாக செல்வ முருகனுக்கு கிராவல் மண்ணை திருடிய மணல் கொள்ளையர்கள் அவரைத் தேடி வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும், அவரது தொலைபேசிக்கு தொடர்ந்து கொலை மிரட்டலும் மற்றும் எந்த அதிகாரிக்கு வேண்டுமானாலும், தொலைபேசியில் தகவல் சொல்லுங்கள். எங்களுக்கு பயம் இல்லை. நாங்கள் தொடர்ந்து மண்ணள்ளி வருகிறோம் என்று தைரியமாக தெரிவித்துள்ளனர். அதேபோல், மாவட்ட ஆட்சியர் தொலைபேசி நம்பர் வேண்டுமென்றாலும் நாங்கள் தருகிறோம் அவருக்கும் கூப்பிடுங்கள் என்று சுரேஷ்குமார் என்பவர் தொலைபேசியில் கூறியுள்ளார்.

மேலும், சுரேஷ்குமார், சகோதரர் ராஜ்குமார் மற்றும் சுரேஷ்குமாரின் மனைவி ஆனந்தி ஆகியோர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விவசாயி செல்வமுருகனின் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்து,தனக்கு கொலை மிரட்டல் விடுத்த மணல் கொள்ளையர்கள் சுரேஷ்குமார், ராஜ்குமார், .சுரேஷ்குமாரின் மனைவி ஆனந்தி மீது உடனடி நடவடிக்கை வேண்டும் தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என புகார் மனு அளித்தார்.


Updated On: 25 Jun 2021 9:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?