/* */

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில்களில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

HIGHLIGHTS

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
X

திண்டுக்கல் கோவில் ஒன்றில் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.

கார்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள், ஒரு மண்டலம் விரதம் இருந்து மண்டல பூஜைக்கு செல்வது வழக்கம். அவ்வகையில், திண்டுக்கல்லில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். திண்டுக்கல் மலையடிவாரம் வட்டார ஐயப்பன் கோவிலில், இன்று அதிகாலையில் கொடியேற்றம், கணபதி பூஜையுடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து, திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர், மாலை அணிந்து கொண்டு தங்கள் விரதத்தை துவங்கினர். எனினும், சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மாலை அணிந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை, இன்று மிகவும் குறைவாக காணப்பட்டது.

சபரிமலையில், 60 வயதிற்கு மேல் உள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அங்கு செல்ல முடியாத பக்தர்கள், திண்டுக்கல் மலைக்கோட்டை ஐயப்பன் திருக்கோவிலில் விரதத்தை பூர்த்தி செய்து, நெய் அபிஷேகம் செய்து கொள்ள, கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 17 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...