/* */

பைனான்சியர் வீட்டில் திருடிய 2 பேர் கைது: நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்

திண்டுக்கல் பைனான்சியர் வீட்டில் திருடிய இருவரை கைது செய்த போலீஸார் 116 பவுன் நகை ,சொத்து ஆவணங்கள் மீட்டனர்

HIGHLIGHTS

பைனான்சியர் வீட்டில்  திருடிய 2 பேர் கைது:  நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்
X

திண்டுக்கல் பைனான்சியல் வீட்டில் திருடிய இருவரிடமிருந்து போலீஸாரால் மீட்கப்பட்ட நகைகள்

திண்டுக்கல்லில் பைனான்சியர் வீட்டில் திருடிய சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது. செய்துஅவர்களிடம் இருந்து 116 பவுன் நகை மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

திண்டுக்கல் கிழக்கு ரத வீதி ஜான் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கண்ணன்( 54 ).நிதி நிறுவன அதிபர் இவருடைய மனைவி கவிதா(45 ).கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி நள்ளிரவில் கண்ணன் வீட்டின் மொட்டை மாடி வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகளை திருடிச்சென்று விட்டனர்.

அடுத்த நாள் காலையில் கவிதா எழுந்து பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் கிடந்ததையும், அதிலிருந்த 145 பவுன் நகைகள் காணாமல் போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அத்துடன் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது, தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜாகிர் உசேன் ( 35) அதே பகுதியை சேர்ந்த நவாஸ் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தென்காசி சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த நகைகளில் 116 பவுன் நகைகள் அடகு வைக்கப்பட்டிருப்பது மற்ற நகைகளை விற்று சொத்துகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கூறிய விவரங்களின் அடிப்படையில் அடகு வைக்கப்பட்டு இருந்த116 பவுன் நகைகள் மற்றும் சொத்துகளுக்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த குற்றப்பிரிவு போலீசாரை திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.


Updated On: 22 Jan 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...