/* */

திராவிட மாடலை ஸ்டாலின் கைவிடவேண்டும்- அர்ஜுன் சம்பத் பேட்டி

திராவிட மாடலை அண்ணா கைவிட்டது போல ஸ்டாலின் கைவிட வேண்டும் என கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் பேட்டி.

HIGHLIGHTS

திராவிட மாடலை ஸ்டாலின் கைவிடவேண்டும்- அர்ஜுன் சம்பத் பேட்டி
X

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

தேசிய தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பாஜக பிரமுகரை சந்திப்பதற்காக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் இன்று கடலூர் வருகை புரிந்தார். அப்பொழுது தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக ஆட்சி அமைந்த பின் பாலின் விலையை மூன்று ரூபாய் குறைத்து தமிழக முதல்வர் கையெழுத்திட்டு நிலையில் தற்போது ஆவின் பாலில் வெண்ணை நெய் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்துள்ளதை குறைத்து உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில், உக்ரேனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வரும் நிலையில் தமிழக அரசு குழு ஒன்றை ஏற்படுத்தி இருப்பது ஏற்க முடியாதது. மத்திய மாநில அரசுகளுக்கு என்னென்ன அதிகாரம் உள்ளதோ அதன்படி செயல்பட வேண்டும். ஒன்றியம் என்ற பேச்சு பிரிவினைவாதத்தை உருவாக்கும், திராவிட மாடலை அண்ணா கை விட்டதைப் போல் ஸ்டாலின் கைவிட வேண்டும் என்றார்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் செயல்படும் நிலையில் தமிழக உரிமை சார்ந்த விவகாரங்களில் முதல்வர் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறிய அவர், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுகவில் ஊடுருவி தங்களது மறைமுக செயல்பாட்டை திமுக மூலம் செய்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும் மதவாத அடிப்படையில் வீசிய செயல்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய அவர் தமிழக முதல்வர் தனது சொந்த அறிவின்படி செயல்படுகிறாரா என கேள்வி எழுப்பினார்.

மேலும் தற்போதைய சென்னை மேயராக பதவி ஏற்றுள்ள பிரியா என்பவர் கிரிப்டோ கிருத்துவர் எனவும் பட்டியலினத்தவர் அலங்கரிக்க வேண்டிய சென்னை மேயர் பதவியை எப்படி அனுபவிக்க முடியும் எனவும் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பினார்.

Updated On: 8 March 2022 10:14 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்