/* */

கடலூர்: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை

குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 52 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

கடலூர்: குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை
X

20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்னி வீரன் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சி.புதுப்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் 52 வயதான அக்னி வீரன்.

கடந்த 2020 ம்ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியைச் சார்ந்த மூன்றரை வயதுடைய பெண் குழந்தை, அக்னி வீரன் வீட்டின் அருகே விளையாட சென்ற போது பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் அது தொடர்பான வழக்கின் விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இதனையடுத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில்,மூன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அக்னிவீரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சமூக பாதுகாப்புத்துறை நலவாழ்வு நிதியிலிருந்து கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் 30 நாட்களுக்குள் 5 லட்ச ரூபாயை குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகளின்படி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி எழிலரசி உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 26 Nov 2021 5:20 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...