/* */

கடலூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை அகற்றிய மாநகராட்சி

கடலூரில் வெள்ளப்பெருக்கு மண் அரிப்பினால் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

HIGHLIGHTS

கடலூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த நிழற்குடையை அகற்றிய மாநகராட்சி
X

கடலூரில் இடிந்த நிலையில் இருந்த நிழற்குடை அகற்றப்பட்டது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகள் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள், மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ள நீர் வடிய தொடங்கிய நிலையில் கடலூரில் மூன்று நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது இதன்கரணமாக தென்பெண்ணை ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நிழற்குடை மண் அரிப்பின் காரணமாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வந்து பார்வையிட்டனர், அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு பயணிகள் நிழற்குடையை காவல்துறையினரின் உதவி கொண்டு தகர்த்தனர்.

மேலும் தென்பெண்ணை ஆற்றில் நீர் அதிகமாக வருவதால் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் இணைப்புச் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Nov 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  2. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  3. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  4. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  6. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  7. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  9. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  10. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...