/* */

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க இயக்குனர் கௌதமன் கோரிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க வேண்டும் இல்லையெனில் மக்களை திரட்டி போராடுவோம் என இயக்குனர் கௌதமன் கூறினார்.

HIGHLIGHTS

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க  இயக்குனர் கௌதமன் கோரிக்கை
X

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க வேண்டும் என்று இயக்குனர் கௌதமன் கடலூர் மாவட்ட ஆட்சியிரிடம்  சிவனடியார்களுடன் மனு  அளிக்க வந்தார்.

தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் மற்றும் சிவபக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோருடன் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் உலகப் புகழ்பெற்றது. இவ்வாலயத்திற்கு உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களை அடித்து தீட்சதர்கள் அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் தங்களது சொகுசு வாழ்க்கைக்காக கோயிலை சிதைத்து வருகின்றனர். கோயிலில் திருச்சிற்றம்பலத்தில் நின்று தேவாரம், திருவாசகம் பாடவும் பக்தர்கள் அங்கு நின்று நடராஜரை வணங்கவும் பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனை கேள்வி கேட்ட பெண் பக்தையை அவமரியாதை செய்துள்ளனர். தங்களது சுய லாபத்திற்காக சிதம்பர ரகசியம் திரையை ஒரு சிலருக்கு மட்டுமே விலக்கி தரிசனம் செய்ய வைக்கின்றனர்.

அதேபோல் 2009 ஆம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் இந்துசமய அறநிலையத்துறை வசம் கோயில் இருந்த போது வருமானமாக பெறப்பட்ட ரூ.3 கோடி காணிக்கை இதுவரை என்னவானது என்று தெரியவில்லை. கோயிலின் மண்டப சுவர், கல்வெட்டு, மதில் சுவர் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தக் கூடாது என்ற விதிகள் மீறப்பட்டதோடு நடராஜர் வீற்றிருக்கும் கருவறை பிரகாரத்திலும் புதிய அறை கட்டப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு பூஜைகள் என்ற பெயரில் கோடி கணக்கில் பணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் இக்கோயிலை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதால் அரசு இக்கோயிலை கையகப்படுத்தவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் எங்கள் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து தரப்பினரையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.



Updated On: 23 Nov 2021 3:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!