/* */

அதிமுக ஒப்பந்தங்கள் போர்க்கப்பல் போன்றது: முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் பதில்

அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் விக்ரம் சாராபாய் கப்பல் போன்றது என முதல்வருக்கு முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் பதிலடி.

HIGHLIGHTS

அதிமுக ஒப்பந்தங்கள் போர்க்கப்பல் போன்றது: முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் பதில்
X

முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சம்பத்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 4 நாள் அரசு முறைப் பயணமாக துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்களாகத்தான் உள்ளன என தெரிவித்தார்.

இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் கூறுகையில் அதிமுக ஆட்சிகாலத்தில் கோரப்பட்ட ஒப்பந்தங்கள் விக்ரம் சாராபாய் கப்பல் போன்றது. அது காகிதகப்பல் அல்ல, முதலமைச்சர் எங்களை கொச்சைப்படுத்துவது நியாயம் அல்ல. நாங்கள் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தலைதூக்கி நிற்கிறது. கொரோனா காலத்திலும் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் உலக அளவில் முதலீடுகளை ஈர்க்க முதல் மாநிலம் தமிழகம் என பல்வேறு நாளிதழ்கள் பாராட்டியுள்ளன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சிதான் முதல்வர் கையெழுத்திட்டு செயல்படுத்துகிறார். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காகித கப்பல் என முதல்வர் கூறுவது விந்தையாகவும், வியப்பாகவும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்தார்.

Updated On: 31 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்