/* */

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

கடலூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
X

கடலூர் கோர்ட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சதீஷ்குமார் போலீஸ் காவலில் உள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள தீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவருக்கும் விருத்தாசலத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் செல்போனில் மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது.

இதனையடுத்து அந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதீஷ்குமார் அங்கு சென்று அடிக்கடி சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதற்கிடையே சிறுமியின் காதல் விவகாரம் பற்றி அறிந்த பெற்றோர் அவரை கண்டித்ததில் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அதன்பிறகும் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

சிறுமி வீட்டார் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசியதற்கு சதீஷ்குமாரின் உறவினர்கள் சிறுமியின் உறவினர்களை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது தொடர்பாக விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர்.

கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில் சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து 30 நாட்களுக்குள் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Updated On: 30 Sep 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்