/* */

தடையை மீறி செங்கல் சூளைகளில் லோடு ஏற்றி வந்த இரு லாரிகள் பறிமுதல்

தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

HIGHLIGHTS

தடையை மீறி செங்கல் சூளைகளில் லோடு ஏற்றி வந்த இரு லாரிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளால் கனிம வளங்கள் அழிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பல சூளைகள் இயங்குவதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் தடாகம் காவல்துறையினர் கணுவாய் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியே செங்கற்களை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு செல்லபட்டது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பின்னர் தடையை மீறி செங்கல் சூளைகளில் இருந்து செங்கல் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்கள் சத்தியமூர்த்தி மற்றும் கனகராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 18 Aug 2021 7:15 AM GMT

Related News