/* */

கோவையில் போலீசார் உஷார்; வாகன சோதனை தீவிரம்

Coimbatore News, Coimbatore News Today-போலீஸ்காரர் செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில், வாகன சோதனை தீவிரமாக நடக்கிறது.

HIGHLIGHTS

கோவையில் போலீசார் உஷார்; வாகன சோதனை தீவிரம்
X

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாநகரில், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றிய செல்வராஜ் கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி உக்கடம் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த நாள், கோவையில் பெரிய கலவரம் ஏற்பட்டது. கடைகள் சூறையாடப்பட்டன. வன்முறை தாண்டவமாடியது. கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பதட்டம் உருவானது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29-ம் தேதி போலீஸ்காரர் செல்வராஜ் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் போலீஸ்காரர் செல்வராஜ் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவையில் 'சென்சிடிவ்' ஏரியாக்களாக கருதப்படும் உக்கடம், கோட்டைமேடு, டவுன்ஹால், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக அதிரடிப்படை போலீசார், சிறப்பு படை போலீசார் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கோவை சுங்கம், கோட்டைமேடு, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், சுந்தராபுரம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் போலீசர் தீவிர வாகன சோதனை நடத்தினர். வருகிற 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகும். எனவே கோவை நகரம் மற்றும் புற நகர் பகுதியில் வருகிற 7-ம் தேதி வரை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சமீபத்தில் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவமும், பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ)போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முகமது அசாரூதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தமிழகத்தில் 45க்கும் மேற்பட்ட இடங்களில், இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் வீடுகளில், என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.

மேலும், மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், காயமடைந்த ஷாரிக், கோவையில் சில தினங்கள் இருந்ததாக கிடைத்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாரிக், தீவிரவாத இயக்க தொடர்புடையவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், போலீசார் உஷார் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 2 Dec 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?