/* */

சென்னையில் சிறப்பு முகாம் மூலம் 2,01,805 தடுப்பூசி

சென்னையில் 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் இன்று 2,01,805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் சிறப்பு முகாம் மூலம் 2,01,805 தடுப்பூசி
X

சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமில் தலைமை செயலர் ஆய்வு மேற்கொண்டார் 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நேற்று வரையில் அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 31,34,803 முதல் தவணை தடுப்பூசிகள், 15,39,539 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 46,74,342 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்தது.

மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 7,64,830 முதல் தவணை தடுப்பூசிகளும் 2,48,695 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என 10,13,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 56,87,867 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்தது.

சென்னை மாநகராட்சியின் சார்பில், இன்று நடைபெற்ற 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 2,01,805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் இறையன்பு,அடையாறு மண்டலம், வார்டு-173, பசுமை வழி சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையம் மற்றும் வார்டு-173ல் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை, வார்டு-172ல் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123 பீமன்னா கார்டன் மற்றும் வார்டு-125 சாந்தோமிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி,மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு,சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி,துணை ஆணையாளர்கள் டாக்டர் எஸ். மனிஷ்,(சுகாதாரம்),விஷு ம.காஜன் (வருவாய் மற்றும் நிதி),சினேகா (வடக்கு வட்டாரம்),சிம்ரன்ஜித் சிங் கோஹ்லன், (தெற்கு வட்டாரம்), மாநகர நல அலுவலர் ஜெகதீஷ் , மாநகர மருத்துவ அலுவலர் மற்றும் மண்டல அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்

Updated On: 19 Sep 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!