/* */

சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்புப்பணி: மின்சார ரயில்கள் ரத்து

இன்று இரவு 10 ரயில்களும், நாளை 84 ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக நாளை சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்புப்பணி:  மின்சார ரயில்கள் ரத்து
X

சென்னை புறநகர் ரயில் - கோப்புப்படம் 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு நடைபெற உள்ளது. எனவே இன்று சனிக்கிழமை இரவு 9.25, 10.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில்,

  • இரவு 10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்,
  • இரவு 10.20, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில்,
  • இரவு 11.15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில்,
  • இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில் ஆகியவை ரத்து செய்யபடுகிறது

இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்திலிருந்து மூர்மார்க்கெட்டிற்கு வரும் ரயில்,

இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர்மார்க்கெட் வரும் ரயில்,

இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7.50, 8.55, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில்,

  • காலை 3.50, 6 மணி, 7.40 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி செல்லும் ரயில்,
  • காலை 4.15, 5.15, 6.20, 7.15, 7.30 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் செல்லும் மின்சார ரயில்,
  • காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்,
  • காலை 4.30, 5 மணி, 5.40, 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில்,
  • காலை 5.30, 6.30, 7 மணி, 8.20, 9.10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்,
  • கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு காலை 5.20, 5.55 மணிக்கு செல்லும் மின்சார ரயில்,
  • கடற்கரையில் இருந்து ஆவடிக்கு காலை 6.50, 8.10 மணிக்கு செல்லும் மின்சார ரயில்,
  • சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு காலை 9.10 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மறுமார்க்கமாக பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள்,

  • ஆவடியில் இருந்து காலை 3.50, 4 மணி, 4.25, 6.10, 6.40, 9.15 மணிக்கு மூர்மார்க்கெட் புறப்படும் ரயில்கள்,
  • ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 6 மணி, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரயில்கள்,
  • திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள்,
  • அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில்கள்,
  • திருத்தணியில் இருந்து காலை 4.30, 5.30, 7 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரயில்கள்,
  • அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி இன்று இரவு 10 ரயில்களும், நாளை 84 ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக நாளை சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி

  • சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 3.50, 5 மணி, 6.50, 8.40, 9.35 மணிக்கு திருவள்ளூருக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும்.
  • மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 6.30, 7 மணி, 8.20, 9.10, 9.15 மணிக்கு அரக்கோணத்துக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும்,
  • காலை 7.40 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து சிறப்பு ரயில் திருத்தணிக்கு புறப்படும்,
  • சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.10 மணிக்கு சிறப்பு ரயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு புறப்படும்.
Updated On: 9 Dec 2023 2:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...