/* */

செல்போனை நேர்மையுடன் கொடுத்த பள்ளி மாணவருக்கு காவல்துறை பாராட்டு

30 ஆயிரம் மதிப்புள்ள கீழே கிடந்த செல்போனை நேர்மையுடன் எடுத்துக் கொடுத்த பள்ளி மாணவருக்கு காவல்துறையினர் பாராட்டு

HIGHLIGHTS

செல்போனை நேர்மையுடன் கொடுத்த பள்ளி மாணவருக்கு காவல்துறை பாராட்டு
X

திருவொற்றியூர் ராஜாகடை பகுதியில் இருக்கும் ரேவூர் பத்மநாபா தனியார் பள்ளியில் 10.ம் வகுப்பு படிக்கும் மாணவன் சரீப் அகமது பள்ளியை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே கீழே விழுந்து கிடந்த 30, ஆயிரம் மதிப்பிலான செல்போனை எடுத்து அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திருவொற்றியூர் காவலர்களிடம் பள்ளி மாணவன் செல்போனை ஒப்படைத்து கீழே கிடந்த விபரங்களை எடுத்துக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செல்போனை தவற விட்ட நபர் கூறிய விவரங்களின் அடிப்படையில் அவருக்கு செல்போனை திருப்பிக் கொடுத்தனர் மேலும் நேர்மையுடன் செயல்பட்ட பள்ளி மாணவனை திருவொற்றியூர் காவல் நிலையம் அழைத்து உதவி ஆணையர் முகம்மது நாசர் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் வெகுமதிகள் அளித்து பாராட்டினார். மேலும் மாணவன் படித்த பள்ளிக்கூடத்திருக்கும் நேரடியாக சென்று பள்ளி மாணவனின் நேர்மையை மற்ற மாணவர்களுக்கும் எடுத்துக்காட்டாக கூறி அறிவுரைகளும் வழங்கினார். நேர்மையுடன் செயல்பட்ட பள்ளி மாணவனை காவல்துறையினரும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Updated On: 2 April 2022 4:30 AM GMT

Related News