/* */

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததா ? சி.பி.சி.எல் நிறுவனம் மறுப்பு

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இப்பிரச்னை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததா ? சி.பி.சி.எல் நிறுவனம் மறுப்பு
X

பைல் படம்

சென்னை, திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் மற்றும் கழிவு எண்ணெய் பெருக்கெடுத்து வெள்ளநீருடன் கலந்து கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சி.பி.சி.எல். நிறுவனம் காரணம் அல்ல என மறுப்பு தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் சுமார் 5 ஆயிரம் கன அடிவரை உபரி நீர் திறக்கப்பட்டதால் மணலி, சேக்காடு, ஆண்டார்குப்பம், ஆமுல்லைவாயல், சடையன்குப்பம், திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்கு புகுந்துள்ளது.

இதனால் இப்பகுதியில் மின்சாரம், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டும் வெள்ள நீர் எண்ணூர் முகத்துவாரம் வழியாகக் கடலில் சென்று கலக்கிறது. இந்த முகத்துவாரம் எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

இவ்வாறு கடலில் சென்று கலக்கும் வெள்ளநீர் எண்ணெய் கழிவுகள் கலந்து சாக்கடை போல கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஐந்து நாள்களாக காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் வெளியேற்றப்பட்டாலும் வியாழக்கிழமை வரை வெள்ளநீர் கருப்பு நிறமாகவே உள்ளது. தற்போது வெள்ள நீர் வடியத் தொடங்கிவிட்ட நிலையில் குடியிருப்பு பகுதிகளிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

வியாழக்கிழமை நிவாரணப் பணிகளை மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ள இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது வெள்ளநீரில் எண்ணெய்க் கழிவுகள் கலந்தது எப்படி என்பது குறித்து மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

சி.பி.சி.எல். நிறுவனம் மறுப்பு:

இப்பிரச்னை குறித்து சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்கம்: வெள்ள நீரில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சிபிசிஎல் மணலி சுத்திகரிப்பு ஆலையில் கச்சா எண்ணெய்க் குழாயில் கசிவுகள் ஏதும் இல்லை. ஆதாரம் இல்லாத வகையில் சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.சி.எல் நிறுவனம் எல்பிஜி, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற மக்களின் அத்தியாவசிய எரிபொருள்களை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. புயல் காரணமாக இடைவிடாத மழை பெய்ததால் ஆலை வளாகத்திற்குள் த்திற்குள் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. மணலியின் பிற தொழில்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும் ஆலையில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு உற்பத்தி திறன் குறைந்து தட்டுப்பாடு இல்லாத நிலையை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது நீர் வரத்து குறைந்து வரும் நிலையில் எண்ணெய் கழிவுகள் எவ்வாறு கலந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். தற்போதைய நிலையில் இப்பிரச்னைக் கு சி.பி.சி.எல். நிறுவனம் எந்தவிதத்திலும் காரணாக இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இப்பிரச்னை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

Updated On: 9 Dec 2023 2:45 PM GMT

Related News