/* */

3,12000 டோஸ் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது

தமிழ்நாட்டிற்கு மேலும் 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து விமானத்தின் மூலம் சென்னை வந்து சோ்ந்தன

HIGHLIGHTS

3,12000 டோஸ் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது
X

சென்கை்கு விமானம் மூலம் வந்த  3,12000 டோஸ் தடுப்பூசிகள்

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

அதிலும் 3 வது அலையிலிருந்து தப்பிக்க 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளதால்,பொதுமக்களும் மிகுந்த ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.

இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.எனவே தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இந்நிலையில் இன்று ஒன்றிய சுகாராத்துறை தமிழ்நாட்டிற்கு மேலும் 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கிலிருந்து விடுவித்தது.

அந்த 3,12,000 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 26 பாா்சல்களுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புனேவிலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தது.

அதில் 1,44,000 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 12 பாா்சல்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் கொண்டு சென்றனா்.

1,68,000 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 14 பாா்சல்கள் சென்னை பெரியமேட்டில் உள்ள ஒன்றிய மருத்துவ கிடங்கிற்கு வந்திருந்தன.

அவைகளை ஒன்றிய மருத்துவ கிடங்கு அதிகாரிகள் குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி பெரியமேடு ஒன்றிய மருத்துவ கிடங்கிற்கு எடுத்து சென்றனா்.

இன்று ஒரே நாளில் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்து 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 26 பாா்சல்களில் சென்னைக்கு வந்துள்ளன.

Updated On: 24 July 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...