/* */

தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்

தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்துகள் வாங்க முதற் கட்டப்பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
X

அமைச்சர் ராஜ கண்ணப்பன்

சென்னை பல்லவன் சாலை மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆப்ரகாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 16 பணிமனைகள் மேம்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அடையர், திருவான்மியூர் மந்தவெளி, தாம்பரம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், வில்லிவாக்கம், சென்ட்ரல், வள்ளலார்நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி உள்ளிட்ட 16 பணிமனைகளை மேம்படுத்த உள்ளோம். வணிக வளாகம், உட்கட்டமைப்பு என வருவாய் பெரும் வகையில் கட்டமைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் அதிகரித்த பிறக்கு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் வாரநாட்களில் சராசரியாக 7.5 லட்சம் பேரும் திங்கள் கிழமை சராசரியாக 8 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர் என தெரிவித்த அவர், இதன் மூலம் 1450 கோடி மகளிர் இலவச பயணத்தால் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும் தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான அரசாணை வெளியானதும் பேச்சுவார்த்தை துவங்கும். தொழிலார் பிரச்சனை குறித்து கமிட்டி துவங்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும். போக்குவரத்து கழகத்தில் புதிதாக 6000 ஓட்டுநர் நடத்துனர் நியமிக்க பணிகள் நடைபெற்று வருகிறது என கூறினார். தீபாவளி போனஸ் குறித்து நிதி துறையோடு ஆலோசிக்கப்பட்டு விரைவில் பேச்சுவார்த்தை துவங்கப்படும்.

டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கிறது என தெரிவித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்,

அரசு பேருந்துகளில் நாள் ஒன்றிற்கு 1 கோடியே 15 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கிறனர். டீசலுக்கான மானியம் அரசு வழங்கினாலும் தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்து துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

மேலும், பஸ் கட்டணத்தை தற்போது உயர்த்துவதற்கான எண்ணம் இல்லை என கூறிய அவர், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நிதிதுறையுடன் பேச்சுவார்த்தை குழு போடப்பட்டு , விரைவில் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

போக்குவரத்து துறையில் தீபாவளி பண்டிகையொட்டி இனிப்பு வழங்குவது தொடர்பாக தனியாரிடம் டெண்டர் விடப்படும் அதனடிப்படையில் டெண்டர் யாருக்கு கொடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். தனியார் நிறுவனத்தை விட ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் வழங்கினால், ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் விடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார். இன்று டெண்டர் குறித்த முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், தீபாவளி சிறப்பு பேருந்து குறித்து தேவைக்கு ஏற்ப குறைவில்லாமல் பேருந்துகள் கொடுக்கப்படும். புதிதாக 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கிறது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பெண்களின் இலவச பயணத்திற்காக 7500 லிருந்து 8000 நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது மகளிர் இலவச பயணத்திற்கு இயக்கப்படுகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Updated On: 23 Oct 2021 6:02 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!