/* */

தடுப்பூசி போட்ட வணிகர்களுக்கு சான்றிதல் வழங்கப்படும்- விக்கிரமராஜா

தடுப்பூசி போட்ட வணிகர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

HIGHLIGHTS

தடுப்பூசி போட்ட வணிகர்களுக்கு சான்றிதல் வழங்கப்படும்- விக்கிரமராஜா
X
விக்கிரமராஜா (பைல் படம்)

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து வணிகர் சங்கம் சார்பில் 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இன்று முதல் ஓட்டல் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தளர்வுகள் வழங்கி, தமிழ்நாடு முழுவதும் ஒரே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்.

மேலும் உணவகங்களில் பார்சல் சேவை 9 மணி வரை இருந்தது அதை தற்போது 8 மணியாக மாற்றியுள்ளனர், இதை 10 மணி வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

கொரோனா மூன்றாவது நோய் தொற்றை தடுக்க, தமிழ்நாடு முழுவதும் வணிகர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு அதற்கான சான்றிதழ் வணிகர் சங்கம் சார்பில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனால் பொதுமக்கள் அச்சமின்றி கடைகளில் பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று தெரிவித்தார்.

மேலும் கொரோனாவிற்கு இரண்டாம் கட்ட நிதியாக 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம் என்றார்‌.

Updated On: 5 July 2021 3:36 PM GMT

Related News