/* */

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

தமிழ்நாட்டில் 4.88 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
X

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 1 கோடி ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 98.3% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15,74,477 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து தமிழகத்தில் அதிகமான சோதனை செய்யப்பட்ட மருத்துவமனையாக ராஜீவ்காந்தி மருத்துவமனை விளங்குகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 1001 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர், தற்போது 207 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 2.87 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 4.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று தடுப்பூசி செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Aug 2021 1:17 AM GMT

Related News