/* */

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் -கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிலும் 75 % கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

HIGHLIGHTS

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் -கல்வித்துறை  அதிகாரிகள் எச்சரிக்கை
X

தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வுகள் நேற்று முடிவுக்கு வந்தன. கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும், வரும் 13ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், தனியார் நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதேபோல, புதிய கல்வி ஆண்டில் அடுத்த வகுப்புக்கு முன்னேறி செல்லும் மாணவர்களுக்கான, தேர்ச்சி பட்டியல் வழங்கும் பணியும் துவங்கியுள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிலும் 75 % கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி, பள்ளிகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்,அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணங்களை தனியார் பள்ளிகள் வசூலிக்க துவங்கி உள்ளன. இதில், சில மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், கொரோனா காலத்துக்கு முன்பிருந்த பழைய கட்டணப்படியே, புதிய கல்வி ஆண்டுக்கும் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், தனிமனித பொருளாதாரம் மற்றும் வருவாய் அதிகரிக்காத நிலையில், பல பள்ளிகள் மீண்டும் பழைய கட்டணத்தையே செலுத்துமாறு, கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் இயக்குனரகம் சார்பில், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.அதில், கூறியிருப்பதாவது: எந்த தனியார் பள்ளியும், கொரோனாவுக்கு முந்தைய கல்வி கட்டணத்தின்படி, புதிய கல்வி ஆண்டில் கட்டணம் வசூலிக்க கூடாது.

புதிய மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை, கட்டட நிதி, அறக்கட்டளை நிதி என, எந்த பெயர்களிலும் மறைமுக கட்டணம் வசூலிக்க கூடாது. பெரும்பாலான பெற்றோர், இன்னும் கடன் சுமை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத நிலையில், 75% கட்டணத்தை மட்டுமே, பள்ளிகள் வசூலிக்க வேண்டும். அரசின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Jun 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...