/* */

இந்திய தேர்தல் ஆணையம் நடைத்தும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

இந்திய தேர்தல் ஆணையம் நடைத்தும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி
X

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெறும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் எனது வாக்கு எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் இணையதளம் மூலமாக கீழ்கண்ட தலைப்புகளில் நடைபெறுகிறது.

1. குறும்படம் உருவாக்கம் (VideoMaking Contest)

2 பாட்டுப்போட்டி (Song Contest)

3. சுவரொட்டி உருவாக்கம் (Poster Design Contest)

4. சுலோகன் உருவாக்கம் (Slogan contest)

5. வினாடி வினா (Quiz Contest)

ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.

இந்தத் தலைப்புகளில் நடைபெறும் போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வாக்காளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், குறும்படம் உருவாக்கம், பாட்டுப்போட்டி மற்றும் சுலோகன் உருவாக்கம் ஆகியவை மட்டும் ஆர்வலர்கள், தொழில் முறை கலைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் என்ற மூன்று பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளில் கலந்து கொள்ள https://voterawarenesscontestin/ என்ற இணையதள முகவரியில் 15.03.2022க்குள் பதிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் கீழ்க்கண்டவாறு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.






(50 படைப்புகளுக்கு)

இவை தவிர, வினாடி வினாப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. வினாடி வினாப் போட்டியில் மூன்றாவது கட்டம் முதல் பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் நபரோ அல்லது குழுவோ மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். படைப்புகள் அனைத்தும் அரசியல் கட்சி சார்ந்தோ, மத அடிப்படையிலோ , எவ்வித குறிப்பிட்ட கலாச்சாரத்தை பாதிக்கும் வகையிலோ அல்லது உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையிலோ அமைந்திடக் கூடாது. மேலும், இவை இந்திய பதிப்புரிமைச் சட்டம் 1957க்குட்பட்டு அசல் படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.

குறும்படம் உருவாக்கம், பாட்டுப்போட்டி மற்றும் சுலோகன் உருவாக்கம் ஆகிய போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது படைப்புகளை ஆங்கிலம் உட்பட இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளில் விருப்பத்திற்கேற்ப படைக்கலாம்.

ஆனால், பிராந்திய மொழிகள் பயன்படுத்தப்படும் பொழுது அவற்றிற்கு துணை தலைப்பு (Sub Title) கொடுக்க வேண்டும். இப்போட்டிகள் தொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்தவற்றை இந்திய தேர்தல் ஆணையத்தின் https://ecisveep.nic.in/contest/ அல்லது https://voterawarenesscontestin/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

என்வே, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி இணை இயக்குநர் மக்கள் தொடர்பு அலுவலர் கூறியுள்ளார்.


Updated On: 16 Feb 2022 10:58 AM GMT

Related News