/* */

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் சேவை

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

HIGHLIGHTS

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே  மெட்ரோ ரெயில் சேவை
X

சென்னையில் விமான நிலையம்-விம்கோநகர், பரங்கிமலை-சென்ட்ரல் ரெயில் நிலையம் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் தினமும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மெட்ரோ ரெயிலை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் வரை நீட்டிக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.4080 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக 15.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. விமான நிலையம்- கிளாம்பாக்கம் இடையே 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியும்.

மேலும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய முடியும் என்பதாலும், திட்டமிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதாலும் இந்த பாதையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் வாகன நெருக்கடியை தவிர்க்க ஜி.எஸ்.டி. சாலையில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணிகள் ஒரு பகுதி முடிந்துள்ளது. மேலும் பஸ் நிலைய கட்டுமானத்தின் முழு பணிகளும் முடிந்து 2023-ம் ஆண்டு பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே ரெயிலில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்க இருக்கிறது. இது 15.3 கி.மீ. தூரத்துக்கு மேம்பால பாதையாக இருக்கும் என்பதால் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெறும்.

இதற்காக விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். மாநில அரசு மற்றும் மத்திய அரசின் ஒப்புதலை பெற்று பணியை எவ்வாறு விரைந்து முடிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் இந்த திட்டத்துக்கு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்குவதுடன் அதற்கான நிதியும் ஒதுக்க வேண்டும். இந்த மெட்ரோ ரெயில் பாதை பணியை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறினர்

Updated On: 9 March 2022 7:18 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!