/* */

கொளத்தூர் தொகுதியில் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: பதற்றம்!

கொளத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

கொளத்தூர் தொகுதியில் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: பதற்றம்!
X

கோப்பு காட்சி

சென்னை லயோலா கல்லூரியில் அண்ணாநகர், பெரம்பூர், கொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு ஆகிய தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது.

கீழ்தளத்தில் கொளத்தூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணப்பட்டு வருகிறது. அந்த மையத்தில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியபோது சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தான் வரும் முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீல் லேசாக உடைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் மற்றும் திமுக ஏஜெண்டுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சிறிது நேரம் ஓட்டு எண்ணிக்கை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சுயேட்சை வேட்பாளரை வெளியேற்ற தேர்தல் அதிகாரிகள் போலீசாருக்கு உத்தரவிட்டனர். வேட்பாளரை போலீசார் வெளியேற்ற முயன்றதால் பரப்பு ஏறபட்டது.

பிற கட்சி ஏஜெண்டுகள் வேட்பாளரை தேர்தல் அதிகாரி எவ்வாறு வெளியேற்றலாம் என கேள்வி எழுப்பியதையடுத்து தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணிக்கை அறையிலேயே சுயேட்சை வேட்பாளரை இருக்க அனுமதித்தனர். அதன் பிறகு காலதாமதமாக மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

Updated On: 2 May 2021 11:21 AM GMT

Related News