/* */

தமிழகத்தில் களை கட்டுது தீபாவளி... கடைகளில் அலைமோதும் கூட்டம்

diwali sales started in all cities தமிழகத்தில் மிகச்சிறப்பான பண்டிகையாக ஆண்டுதோறும் திகழ்வது தித்திக்கும்...தீபாவளிதான்...இன்னும் 14 நாட்களே உள்ளது. கடைகளில் களை கட்டுது வியாபாரம்

HIGHLIGHTS

தமிழகத்தில் களை கட்டுது தீபாவளி...  கடைகளில் அலைமோதும் கூட்டம்
X

தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புதான்... விதவிதமான வெரைட்டிகளில்  (பைல்படம்)

diwali sales started in all cities



தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைவீதிகளில் கூடும் கூட்டத்தினை உயர்மட்டகோபுரத்தில் இருந்து கண்காணிக்கும் போலீஸ். (பைல்படம்)

diwali sales started in all cities

தமிழகத்தினைப்பொறுத்தவரை ஐப்பசி மாதஅமாவாசை தினத்தன்று தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.இந்த ஆண்டில் இம்மாதம் 24 ந்தேதி தீபாவளிப்பண்டிகை நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, உள்ளிட்ட நாட்களில் தீபாவளிப் பண்டிகையானதுகொண்டாடப்படுகிறது.உண்மையில் நரகாசுரனை வதம்செய்த நாளைகொண்டாடுவதாகஐதீகம்

தீபாவளி என்பதே நம் வாழ்வில் தீப ஒளியை ஏற்படுத்துவதாக ஐதீகம். அதாவது நரகாசுரனை வதம் செய்த நாள். அன்றைய தினம் குடும்பத்தில் உள்ள எல்லோரும் பிரம்மமுகூர்த்தத்தில் துயிலெழுந்து எண்ணெய் தேய்த்துகங்கா ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவர். இப்பண்டிகையில் வெகு பிரசித்தம் பட்டாசும், இனிப்பு வகைகளுமே.

தமிழகத்தினைப்பொறுத்தவரை இந்துக்களின்முக்கிய பண்டிகையாக கருதப்படுவது தீபாவளி மட்டுமே. இந்த பண்டிகைக்காக ஒரு மாதம் முன்பிருந்தே நாடு முழுவதும் விற்பனையானது களை கட்டும். மிகப் பெரிய நிறுவனங்கள் தீபாவளிப் பண்டிகைக்கான ஆஃபர்களை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வெளியிட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையைப் பொறுத்தவரை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. அரசு சார்பில் ஒரு சில துறைகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனால் சம்பளம், போனஸ் என பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் பண்டிகையாக தீபாவளிப்பண்டிகை திகழ்கிறது.

இதனால் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் புத்தாடை எடுக்க குடும்பத்தோடு அனைவரும் பஜாருக்கு கிளம்பி விடுவதால் பஜார் களை கட்டி விடுகிறது.எல்லோருமே வாகனங்களில் கிளம்பிவிடுவதால் வார விடுமுறை தினங்களில் போக்குவரத்து பாதிப்பு கடுமையாக ஏற்படுகிறது.

diwali sales started in all cities


diwali sales started in all cities

துணிக்கடைகளைப் பொறுத்தவரை அனைத்து கடைகளிலும் ஆஃபர் விளம்பரப்படுத்தியுள்ளதால் எல்லா கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிய துவங்கி விட்டது. அதுவும் கடந்த ஒரு வார காலமாகவே பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் அனைவருமே கடைகளுக்கு திரண்டுவிட்டதால் காலை முதல் இ ரவு வரை கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தற்காலிக பணியாளர்கள்

தமிழகத்தினைப் பொறுத்தவரை சில முன்னனி நிறுவனங்கள் தீபாவளி நேரத்தில் கடைகளுக்கு வரும் கூட்டத்தினை சமாளிக்க தற்காலிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். கூட்டம் குறைந்தவுடன் இவர்கள் பணியிலிருந்து விலக்கிவிடப்படுவர்.இது ஒவ்வொரு ஆண்டுமே முக்கிய நகரங்களில் உள்ள முன்னனி கடைகளில் நடக்கும் நிகழ்வாகும். தங்குமிடம், உணவு ஆகியவைகள் தற்காலிக பணியாளர்களுக்கு நிறுவனமே ஏற்றுக்கொள்வதோடு இதனை ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அமர்த்த ஒப்பந்ததாரர்கள் மூலமாக இந்த பணிநியமனமானது நடக்கிறது.

பட்டாசு விற்பனை

பட்டாசு பொறுத்தவரை ஆண்டுதோறும் இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்காலிக கடைகளுக்கு உரிமம் அளிக்கப்படுகிறது. அரசின் வழிகாட்டிவிதிமுறைகளுக்கு ஏற்ப கடைகள் அமைக்க இடம் தேர்வுசெய்யப்பட்டால் அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் அனுமதியில்லாமல் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக புற்றீசல் போல் தள்ளுவண்டி கடைகளில் பட்டாசு வியாபாரமும் நடக்கும். அதுவும் தீபாவளிக்கு முன் உள்ள நாளில் பட்டாசு வியாபாரம் உச்சகட்டத்தில் நடக்கும். ஏனெனில் ஒருசிலர் பட்டாசுகளை வாங்கி ஸ்டாக் வீட்டில் வைக்ககூடாது என்ற எண்ணத்தில் கடைசி நாளில் வாங்குவோரும் உள்ளனர்.

diwali sales started in all cities


diwali sales started in all cities

சினிமா

முன்பெல்லாம் தமிழகத்தினைப் பொறுத்தவரை தீபாவளி, பொங்கல் என்றால் முன்னனி நடிகர்கள் நடித்ததிரைப்படங்கள் கிட்டத்தட்ட 10 படங்களுக்குமேல் ரிலீசாவது வழக்கம். தற்போது ஒருசில நடிகர்களின் படங்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் ரிலீ்ஸ் செய்யப்படுகிறது. இதனால் யாரும் சினிமா மேல் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. சேட்டிலைட் சேனல்களில் சேனலுக்கு ஒரு புரோக்ராம் என வித விதமான நிகழ்ச்சிகள் இருப்பதால் வீட்டில் புத்தாடை உடுத்தி இனிப்பு வகைகளை தட்டில்வைத்துக்கொண்டு டிவி முன் உட்கார்ந்துவிடுவோரே ஏராளம்.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து நகரங்களிலும் உள்ள ஜவுளிக்கடைகளில் வியாபாரம் களை கட்ட துவங்கியுள்ளது. அதுவும் சனி, ஞாயிறுகளில் வழக்கத்தினை விடகூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் தீபாவளி என்றாலோ பெண்டிருக்கு விதவிதமான கலெக்‌ஷன்களில் நவீன ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால் அனைத்து பெண்களும் இந்த ஆண்டின் தீபாவளிக்கு வந்த புது கலெக்‌ஷன் என்ன? என்ற எண்ணத்தோடுதான் ஜவுளி கடைகளுக்குள்ளேயே நுழைகின்றனர். ஆடவர், பெண்டிர், சிறுவர், சிறுமியர்களுக்கு என விதவிதமான கலெக்‌ஷன்கள் புதியதாக வந்திருப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பரவல் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் மாஸ்க் மட்டும்அணிந்து கொண்டு ஏசி கடைகளில் பர்ச்சேஸ் செய்து வருகின்றனர்.

diwali sales started in all cities


diwali sales started in all cities

ஆர்டர்களை அள்ளும் ஸ்வீட்கடைகள்

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள்தான். அக்காலத்தில் தீபாவளிப் பண்டிகை வருகிறது என்றால் ஒரே வாரத்திற்கு முன்பாகவே வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீபாவளி பலகாரங்களை செய்ய துவங்கிவிடுவார்கள். வாண்டுகள் அவர்கள் செய்ய செய்ய ஓடோடி வந்து எடுத்து தின்பதும் விளையாடுவதுமாக இருப்பார்கள். இதனை செய்து ஒரு டப்பாவில் அ டைத்து வாண்டுகள் கையில் கிடைக்காத உயரத்தில் அந்த வீட்டின் அம்மா வைத்துவிடுவார். எப்படியும் ஆள் இல்லாத நேரத்தில் ஏறி ஒன்றிரண்டு இனிப்புகளை லவட்டுவதே அக்காலத்தில் த்ரில்லிங்காக இருக்கும்... நம்மாளு என்ன செய்வார் தெரியுமா? எடுத்துவிட்டு பதட்டத்தில் மூடியை சரியாக மூடாமல் வந்து மாட்டிக்கொள்வதும் உண்டு.... இப்போது அந்த பிரச்னைக்கு இடமில்லை... குளித்தோமா , பட்டாசு வெடித்தோமா,,, உடனே கடையில் இருந்து வாங்கி வந்த ஸ்வீட்களை சாப்பிட்டுவிட்டு டிவி முன் அமர்வதுதான் முதல் வேலையாக இருக்கும்.

இதனால் கடந்த 10வருடங்களாகவே முக்கிய நகரங்களில் உள்ள ஸ்வீட் கடைகளில் தீபாவளி வந்துவிட்டாலே மார்க்கெட்டிங் செய்ய ஆட்களை நியமித்து சங்கங்கள், பேங்குகள், ஆபீஸ்கள், என கேன்வாஸ் செய்து அதி க ஆர்டர்களை முன்னதாகவே வாங்கிவிடுகின்றனர். இதனால் வருடா வருடம் இவர்கள் காட்டில் மழைதான்போங்க. அதுவும் நார்மலா கடையானது தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக மாறிவிடும். எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண கலரில் ஸ்வீட்கள் புதுப்புது பெயராக இருக்கும். அதன் கலர்களில் மயங்கி வாங்கி செல்வோரும் உண்டு.

மேலும் பல கேட்டரிங் நடத்துவோர் அவர்கள் தீபாவளிக்காக ஒரு சில இனிப்பு வகைகளும், கார வகைகளும் தனிப்பட்டமுறையில் ஆர்டரின்பேரில் செய்து விற்கின்றனர். இதுமட்டும் அல்லாமல் வருடந்தோறும் தீபாவளி பண்டிகைக்காக பண்டு (சிட்) நடத்தி ஸ்வீட், காரம் மற்றும் பொருட்களை வழங்க உள்ளோரும் ஸ்வீட் தயாரிப்பில் மும்முரமாகியுள்ளனர். இதுபோல் தற்போதைய நவீன தீபாவளி வர இன்னும் 14 நாட்களே உள்ளது. நாங்க கிளம்பிட்டோம்... நீங்க ரெடியா.... வாங்க...

Updated On: 9 Oct 2022 11:29 AM GMT

Related News