/* */

பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தான், அவனை ஏழு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்
X

பிரபல ரவுடி படப்பை குணா

செங்கல்பட்டு,சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் அவன் மீதுகொலை, கொலை முயற்சி ஆள் கடத்தல் உள்ளிட்ட 40 வழக்குகளுக்கு மேல் உள்ளது,

போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்திருந்த நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நடுவர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் முன்பு ஆஜர் ஆகினர்,

அண்மையில் ரவுடிகளை ஒழிப்பதற்காக காஞ்சிபுரம் உதவி கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்பட்டது, இதில் ஒரு குழுவினர் பிரபல ரவுடி படப்பை குணாவை தேடி வந்த நிலையில், தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற பயத்தில் குணாவின் மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார்,

இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை இந்நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் படப்பை குணா சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது,

அவரை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் வரும் 31ம் தேதி வரை ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார், இதனை அடுத்து புழல் சிறையில் பாதுகாப்பு காரணங்களை கருதி சிறைத்துறை டிஐஜி ஆலோசனையின்படி பூந்தமல்லி சிறையில் ரவுடி படப்பை குணவை அடைக்க கொண்டு செல்லப்பட்டான், இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 25 Jan 2022 5:57 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!