/* */

100 % சூரிய மின்சக்தி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சாதனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், 100 % சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

100 %  சூரிய மின்சக்தி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சாதனை
X

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும், 100 சதவீதம் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தியை பெருக்குவது இலக்காக கொண்டு, அதற்காக நடவடிக்கையை ரயில்வே நிர்வகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையத்தில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சூரிய மின்சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய தகடுகள் மூலம் , 100 சதவீத மின் ஆற்றல் தேவை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Sep 2021 9:45 AM GMT

Related News