விபத்தில் தேமுதிக பேச்சாளர் மரணம் அஞ்சலி செலுத்திய பிரேமலதா

சென்னை நொளம்பூர் அருகில் சாலை விபத்தில் தேமுதிக பேச்சாளர் இறந்தார், பொருளாளர் பிரேமலதா அஞ்சலி செலுத்தினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விபத்தில் தேமுதிக பேச்சாளர் மரணம் அஞ்சலி செலுத்திய பிரேமலதா
X

தேமுதிக பேச்சாளர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பொருளாளர் பிரேமலதா

சென்னை கிழக்கு முகப்பேர், சர்ச் சாலையைச் சேர்ந்தவர் செல்வநாதன், (49). இவர், தேமுதிக தலைமைக் கழக பேச்சாளர். இவர் அந்தமான், ராமநாதபுரம், பாதி உனக்கு பாதி எனக்கு உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில், நொளம்பூர் பாடசாலை வழியாக சென்றபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதில் அவர் படுகாயமடைந்தார்.

அருகே உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் அழைத்து வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவரது மரணம் குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மறைந்த தேமுதிக தலைமைக் கழக பேச்சாளர் செல்வநாதன் உடலுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

Updated On: 12 Sep 2021 10:40 AM GMT

Related News