/* */

சென்னை மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 5.82 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னை மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 5.82 லட்சம் பேர் பயணம்
X

பைல் படம்.

சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 575 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணித்துள்ளனர் என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:-

நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும் மற்றும் மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 24.05.2023 அன்று 2,64,974 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023, மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 26,76,546 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 42,18,357 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,61,748 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,218 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,138 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Jun 2023 5:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்