/* */

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி, முதல்வர்

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி, முதல்வர்
X

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதியும், காயமடைந்த காவலர் பொன் சுப்பையாவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாலு நேற்றிரவு காவல் நிலையத்தில் பணியிலிருந்தபோது, ஏரல் கடைவீதியில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ஒருவர் தகராறு செய்வதாக கடையின் உரிமையாளர் தொலைபேசி வாயிலாக தகவல் தந்ததையடுத்து, உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் பொன்சுப்பையாவுடன் அக்கடைக்குச் சென்று தகராறில் ஈடுபட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரை எச்சரித்து அனுப்பி வைத்து விட்டு, இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட இருவரும் இன்று (1 ம் தேதி) அதிகாலை இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆத்திரமடைந்த முருகவேல் என்பவர், சரக்கு வேனை ஓட்டிச்சென்று, இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில், உதவி ஆய்வாளர் பாலு கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், காயமடைந்த காவலர் பொன்சுப்பையாவுக்கு ரூ.2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.மேலும், உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 3 Feb 2021 6:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?