/* */

நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படம் சேதம்: பாஜகவினர் புகார்.

சென்னை மேடவாக்கம் நன்மங்கலத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருத்தியிருந்த பிரதமர் மோடியின் படம் அகற்றியதாக பாஜக புகார்

HIGHLIGHTS

நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படம் சேதம்:  பாஜகவினர் புகார்.
X

 நியாயவிலைக் கடையில் இருந்த பிரதமர் மோடி படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை கோரி பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் புகார் அளித்த பாஜகவினர்

நியாய விலைக் கடையில் இருந்த பாரத பிரதமர் மோடியின் படத்தை அகற்றி சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சென்னை மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் (KG015) பாரத பிரதமர் நரேந்திர மோடி படம் இல்லாமல், முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர் படம் மட்டும் இருப்பதை கண்ட பாஜக பிரமுகரான பரங்கிமலை ஒன்றிய தலைவர் ஜெயமூர்த்தி என்பவர் மோடியின் படத்தை கட்சி நிர்வாகிகள் மூலம் எடுத்துவரச் சொல்லி நியாய விலைக் கடையில் பொருத்தியுள்ளார்.

இதனை அறிந்த நன்மங்கலம் ஊராட்சி திமுக துணைத் தலைவர் செல்போன் எண்ணில் இருந்து பாஜக மாவட்ட செயலாளர் வேல்முருகன் என்பவருக்கு தொடர்பு கொண்டு யார் மோடியின் படத்தை வைத்தது எனவும், நேரில் வரவேண்டுமென

அழைத்தார். பாஜகவினர் நேரில் சென்ற போது நியாய விலைக் கடையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை நன்மங்கலம் ஊராட்சி தலைவர் திமுகவை சேர்ந்த கிரி மற்றும் துணைத் தலைவர் கார்த்தி உட்பட சிலர் கழற்றி சேதப்படுத்தி கீழே வீசினார்கள். மேலும் எங்களையும், பெண் நிர்வாகிகளையும் ஆபாசமாக சைகை காட்டி, திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். இது தொடர்பாக பாஜகவினர் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Updated On: 11 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...