/* */

செய்யூர் ஸ்ரீ மணம்புரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

செய்யூர் ஸ்ரீ மணம்புரீஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யூர்  ஸ்ரீ மணம்புரீஸ்வரர்  கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
X

மணம்புரீஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்த சிவச்சாரியார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா, இந்தளூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செங்கழுநீர் அம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ கங்கை அம்மன், ஸ்ரீ கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனாரப்பன் உள்ளிட்ட ஆலயங்கள் மற்றும் ஸ்ரீ கையிலையார்ந்த உடனுறை ஸ்ரீ மணம் புரீஸ்வரர் திருக்கோயில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரம், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், கொடிமரம், சுவாமி அம்பாள் கர்ப்பக்கிரக விமானங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவையொட்டி, அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில், சிவாச்சாரியார் சங்கர் தலைமையில் கடந்த 6 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து ஏழாம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், 8 ஆம் தேதி இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

விழாவில் இன்று காலை 4 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, யாக சாலையில் இருந்து கும்பங்கள் புறப்பட்டு, கிராமக் கோயில்கள் விமானங்கள் ராஜகோபுரம், கருவரை விமானங்களில் சிவாச்சாரியார்கள் கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

தொடர்ந்து, சுவாமி, அம்பாள் சிறப்பு மகா அபிஷேகமும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குப்பா ரெட்டியார் தலைமையிலான கும்பாபிஷேக விழா குழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 9 Sep 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்