/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 187 ஏரிகள் 100% நிரம்பின

செங்கல்பட்டு மாவட்டத்தில் 187 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 187 ஏரிகள் 100% நிரம்பின
X

கோப்பு படம்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில், மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில், விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு உண்டானது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளது இதில் 187 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

மேலும், 75 சதவீதத்துக்கு மேல் 208 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 120 ஏரிகளும் 25 சதவீதத்திற்கு மேல் 13 ஏரிகளும், நிரம்பி உள்ளன. தொடர்ந்து ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 9 Nov 2021 11:30 AM GMT

Related News