/* */

சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக பெண் பஞ்சாயத்துத் தலைவர் புகார்

சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக பெண் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக பெண்  பஞ்சாயத்துத் தலைவர் புகார்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி பெண் தலைவர் புகார் அளித்தார்.

தமிழகத்தில் தலித் ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த. பெண் ஊராட்சிமன்றத் தலைவரை அவருக்கான இருக்கைகளில் அமரவிடாமல் தரையில் அமரவைத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்காவுக்கு உட்பட்ட நீர்பெயர் ஊராட்சியில், சீதா மோகனகிருஷ்ணன் என்ற பெண் ஊராட்சிமன்றத் தலைவரை அதே ஊரைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளான மணி, மற்றும் முருகன் ஆகிய இருவரும் அவருக்கான இருக்கைகளில் அமரவிடாமலும், சாதி நீதியாக மிரட்டிப் பணி செய்யவிடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறி,

பெண் ஊராட்சிமன்றத் தலைவர் சீதா மோகனகிருஷ்ணன் மற்றும் நீர்பெயர் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், திமுக நிர்வாகிகளான மணி, மற்றும் முருகன் ஆகிய இருவர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

Updated On: 10 Dec 2021 9:00 AM GMT

Related News