/* */

கருப்பு பூஞ்சை நோய் பயமா? இருதய சிகிச்சை நிபுணர் சிறப்பு பேட்டி!!

கரும்பூஞ்சை நோய் பற்றிய பயம் வேண்டாம்: உரிய நேரத்தில் சிகிச்சைபெற்றால் உயிர் பலியை தவிற்கலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார் இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஹோத்தமன்.

HIGHLIGHTS

கருப்பு பூஞ்சை நோய் பயமா? இருதய  சிகிச்சை  நிபுணர்  சிறப்பு பேட்டி!!
X

இருதய நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஹோத்தமன்

கொரோனா குறித்தும், கருப்பு பூஞ்சை நோயிலிருந்து காத்துக்கொள்ள இருதய நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஹோத்தமன் சிறப்பு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை அதி வீரியமாக தொடங்கி மூன்று முதல் ஐந்து சதவீதம் அதிமானது. ஆனால், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு பிறப்பித்ததாலேயே கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து வருகிறது. அதற்காக கவனக்குறைவாக நாம் இருக்கக்கூடாது.

கொரோனாவில் மூன்றாவது அலை தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கொரோனாவில் முதல் இரண்டாவது அலையை விட அதிக அளவிலான பாதிப்புகளை அது ஏற்படுத்தக்கூடும். இதனை தடுக்க ஒரே வழி தடுப்பூசி செலுத்துவதுதான். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திய பகுதிகளில் தாக்கம் 10 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து காணப்படும் நிலை அப்போது ஏற்படும்.

கருப்பு பூஞ்சை நோய் யாரை தாக்கும்?

அதிக அளவில் ஆண்டி பயாடிக் எடுத்துக்கொண்டவர்களுக்கும், சர்க்கரை நோய் அளவை கட்டுக்குள் வைக்காமல் உள்ளவர்களுக்கும், அதிக நாட்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் பெற்றுவந்தவர்களையும் கருப்பு பூஞ்சை நோய் தாக்க அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை அளவை உடலில் சீராக கைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும். தமிழகத்தில் ஐநூருக்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயின் அறிகுறிகள் என்ன?.

ஒரு தொற்று நோய் அல்ல ஆனால், தீராத தலை வலி, கண் சிவந்துபோதல், கண் வீக்கம், கண்ணிலிருந்து அதிக நீர் வடிதல், காது வலி, அதிக பல் வலி, மூக்குக்கு கீழ் பகுதியிலோ அல்லது முகத்தில் கருப்பு வளையங்கள், போன்ற பாதிப்பு அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரையோ அல்லது அரசு மருத்துவமனைகளையோ அனுகி மருத்துவ ஆலோசனைகளை பெற்று தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டால் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து முழுவதுமாக குணமடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 5 Jun 2021 1:17 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!