/* */

செங்கல்பட்டு அருகே அதிமுக வேட்பாளரை தாக்க முயன்ற திமுகவினர்

செங்கல்பட்டு அருகே குண்டர்களை வைத்து அதிமுக வேட்பாளரை தாக்க முயன்றதாக திமுகவினர் மீது பரபரப்பு புகார் எழுந்தது

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே அதிமுக வேட்பாளரை தாக்க முயன்ற திமுகவினர்
X

செங்கல்பட்டு அருகே திமுக-அதிமுக இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருந்தது.

இந்த நிலையில் காலை முதலே செட்டிபுண்ணியம் ஊராட்சியில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றுவந்தது. காலை 9.30 மணியளவில், அப்பகுதிக்கு வந்த திமுகவினர் 40 பேர் திடீரென பொதுமக்களிடம் திமுகவிற்கு வாக்களிக்கவேண்டும் என மிரட்டும் தோனியில் பேசிவந்துள்ளதாகவும் இதன் காரணமாக வாகளிக்க வந்த மக்கள் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அங்கு வந்த அதிமுக வேட்பாளர் அருள் என்பவர் திமுகவினரை தட்டிகேட்டுள்ளார். அப்போது அவரை திமுகவினர் தாக்க முயன்றுள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த திமுகவினர் மற்றும் அவர்களுடன் இருந்த குண்டர்களையும் அப்புறப்படுத்தினர்.

மேலும் அதிமுக வேட்பாளரை தாக்க முயன்றவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பதற்றம் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு திமுக குண்டர்களை ஊருக்குள் விடாமல் பாதுகாக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 9 Oct 2021 8:30 AM GMT

Related News