/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் 333.5 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 12 மணிநேரத்தில் 333.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 மணி நேரத்தில் 333.5 மி.மீ. மழைப்பதிவு
X

கோப்பு படம் 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் இன்று காலை 6 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 12 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

காலை 6 மணிமுதல், மாலை 6 மணி வரை மழை காரணமாக, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல், மாலை 6 மணிவரை பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): செங்கல்பட்டு- 41, மி.மீ, திருப்போரூர்-46.1, மி.மீ, திருக்கழுக்குன்றம்-41.1 மி.மீ, மாமல்லபுரம்-46.4 மி.மீ, மதுராந்தகம்-35 மி.மீ, செய்யூர்-54.5, மி.மீ, தாம்பரம்-66.8, மி.மீ, மழை என மாவட்டத்தில் மொத்தம் 333.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Updated On: 5 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  10. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்