/* */

பேருந்து நிலையத்தில் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது

HIGHLIGHTS

பேருந்து நிலையத்தில் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது
X

சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை ஆசாமி.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் தினந்தோறும் நகராட்சி சார்பில் சுகாதாரத்துறையினர் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய பேருந்துநிலையத்தில், இன்று நான்கு சுகாதாரப் பெண் பணியாளர்கள் கொரொனா பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். அங்கு தள்ளாடி வந்த போதை ஆசாமி ஒருவர் திடீரென பெண் பணியாளர்களை கீழே தள்ளி ஒருமையில் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அருகிலிருந்த ஆறுமுகம் என்ற நகராட்சி ஊழியர் உடனடியாக அங்கு சென்று அந்த மது போதையில் இருந்த ஆசாமியை தடுத்து நிறுத்தி, சுகாதார பணியாளர்களை காப்பாற்றினார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த நகர காவல்துறையினர், அந்த போதை ஆசாமியை பிடித்தனர். அப்போது அந்த போதை ஆசாமி போலீசாரிடம் சரமாரி மல்லுக்கட்ட, பேருந்து நிலையமே சிறிது நேரம் பரப்பானது. இதனைத்தொடர்ந்து போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையதின் அருகே 3 டாஸ்மக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மதுப்பிரியர்கள் மது அறுந்திவிட்டு போதை தலைக்கேறியதும் விசாலமாக உள்ள புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து பொதுமக்களிடமும் பயணிகளுடனும், குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர்.

எனவே பொதுமக்கள் நலன்கருதி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பேருந்து நிலையத்தில் போதிய காவலர்களை நியமிக்கவேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...