/* */

திருவிழா கூட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது

செங்கல்பட்டில் திருவிழா கூட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவிழா கூட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது
X

கைது செய்யப்பட்ட இளம்பெண்ணுடன் காவல் துறையினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேலகோட்டையூர் அம்மன் கோயிலில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது எட்டு பெண்களிடமிருந்து தங்கச்சங்கிலி மாயமாகி இருந்தது. இது குறித்து எட்டு பேரும் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம்பெண் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

தாழம்பூர் ஆய்வாளர் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மணிமங்கலத்தை சேர்ந்த பாண்டீஸ்வரி(25), என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து அவரிடம் இருந்து 47 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இவருடன் 3 பேர் சேர்ந்து இச்சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், சேலம் வீராணம் காவல் நிலையத்தில் ஏற்கனவே இப்பெண் மீது செயின் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேளம்பாக்கத்திலும் இதே போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தற்போது அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 Aug 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  6. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  8. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  9. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  10. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!