/* */

அரியலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து பாட்டி பலி- பேரன் படுகாயம்

அரியலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து பாட்டி பலியானார். 9 மாத கைக்குழந்தையான பேரன் படுகாயம் அடைந்துள்ளான்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே  சுவர் இடிந்து விழுந்து பாட்டி பலி- பேரன் படுகாயம்
X

மண்சுவர் இடிந்து விழுந்ததில் உரியிழந்த செல்வி.

அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் காமராசு. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கமலேஷ் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. காமராசுவின் தாயார் செல்வி.

இன்று காலை 10 மணி அளவில் ஆடுகளை கொட்டகையில் பிடித்து கட்டுவதற்காக செல்வி தனது பேரன் கமலேஷை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மண் சுவர் இடிந்து விழுந்ததில் செல்வி மற்றும் பேரன் கமலேஷ் சுவற்றின் அடியில் சிக்கி கொண்டனர். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டனர்.

படுகாயம் அடைந்த செல்வி மற்றும் பேரன் கமலேஷ் ஆகியோரை அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் செல்வி மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


படுகாயமடைந்த பேரக்குழந்தை கமலேஷ் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...