/* */

அரியலூர் மாவட்ட சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்ட நெடுஞ்சாலை துறை

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சாலையில் புங்கன், வேம்பு, அத்தி, நாவல் ஆகிய 250 மரக்கன்றுகளை நெடுஞ்சாலை துறையினர் நட்டனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்ட நெடுஞ்சாலை துறை
X

தா.பழூர் சாலையில் புங்கன், வேம்பு, அத்தி, நாவல் ஆகிய 250 மரக்கன்றுகளை நெடுஞ்சாலை துறையினர் நட்டு வைத்தனர்.



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் சாலை பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோட்டப் பொறியாளர் உத்தண்டி அறிவுறுத்தலின் பேரில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விளாங்குடி முதல் அண்ணங்காரன்பேட்டை வரை 19.10 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர்.

இதில் தா.பழூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ் ராஜ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது இந்த ஆண்டு 1050 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 250 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதில் புங்கன், வேம்பு, அத்தி, நாவல் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 3:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!