/* */

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கண்டித்து விவசாய சங்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து மேதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காந்தி பூங்கா முன்பாக, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் சங்கபாலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் வீரசோழபுரம் குருவாலப்பர் கோயில் விழப்பள்ளம் சோழன் குறிச்சி தேவமங்கலம் கரைமேடு ஆகிய இடங்களில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில், சாதிவாரியாக வேலையும் கூலியும் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை இல்லை என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்