/* */

புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு

கங்கை கொண்ட சோழபுரத்தில் அனுமதியின்றி புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

புராதன சின்ன பாதுகாப்பு சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு
X

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் அருகே இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம்.


அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டிடங்கள் இருக்கும் இடங்களில் சுமார் 100 மீட்டருக்கு உள்ளாக கட்டிடங்கள், சுரங்கப் பணிகள், சாலை பணிகள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ள கூடாது. பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொள்ள இந்திய தொல்லியல் துறை, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என விதிகள் உள்ளன.

இந்நிலையில், கங்கை கொண்ட சோழபுரத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் பிரகதீஸ்வரர் ஆலயத்திலிருந்து 100 மீட்டருக்குள் ஓய்வு இல்லம் (கெஸ்ட் ஹவுஸ்) கட்டி வந்தார். கட்டிடம் கட்ட எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே அதேஊரை சேர்ந்த செந்தில் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்படுவதை உறுதி செய்ததையடுத்து கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

அதில் இரு வார காலத்திற்குள் கட்டிடம் தரைமட்டமாக அகற்றப்பட வேண்டுமெனவும், அவ்வாறு அகற்றப் படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டிடம் இடிப்பதற்கான காலக்கெடு முடியும் தருவாயில் இருந்த நிலையில், நேற்று இரவு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில், அந்த கட்டிடம் இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்றது.

அப்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இடிக்கப்பட்ட கட்டிடத்தின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Updated On: 18 Feb 2022 2:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  3. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  4. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  7. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  8. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  9. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  10. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...