/* */

பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் திருமண ஜோடி

பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த புதுமண தம்பதிகளை அறிவுரைகள் கூறி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் சுமதி.

HIGHLIGHTS

பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் திருமண ஜோடி
X

பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த புதுமண தம்பதிகளை அறிவுரைகள் கூறி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர் சுமதி.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (24). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார். இவர் அதே பகுதி தெற்கு தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் விந்தியா (20) (நர்சிங் மாணவி) என்பவரை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாக கூறப்படுகிறது. பெண் கொடுக்க மறுத்ததால் விந்தியாவை பிரசாந்த் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் முடித்து விட்டு நண்பரது வீட்டில் தங்கிவிட்டு, பெண்ணின் பெற்றோர்களுக்கு பயந்து காதல் ஜோடியான புதுமணத் தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த பெண்ணின் பெற்றோர்கள் தாங்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் வர மறுத்து விட்டனர். இந்நிலையில் பிரசாந்தின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தனர். அப்போது அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை இன்ஸ்பெக்டர் சுமதி அனுப்பி வைத்தார்.

Updated On: 20 Jun 2022 3:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’