/* */

போலீஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 29 ம் தேதி ஏலம்:எஸ்பி தகவல்

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 27 இரண்டு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது

HIGHLIGHTS

போலீஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 29 ம் தேதி ஏலம்:எஸ்பி தகவல்
X

அரியலூரில் காவல்துறையினரால் ஏலம் விடப்படவுள்ள வாகனங்கள்

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 27 இரண்டு சக்கர வாகனங்கள் 29.03.2022 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படும். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல் பிரிவு, அரியலூர் மாவட்ட அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.9498165793, 9498159595 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 29.03.2022 காலை 08.00 மணிக்கு ரூ.1000முன்தொகை செலுத்தி தங்களது பெயர் முகரியை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவருக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை.

வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து பிற்பகல் 3 மணிக்குகள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வைப்புத்தொகை கழித்துக் கொள்ளப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்ததவறினால் வைப்புத்தொகை திருப்பி தரப்பட மாட்டாது.

ஏலம் ரூ.100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன் வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்துகொள்ள அனுமதியில்லை. வாகனங்களை 27.03.2022-ஆம் தேதி காலை 10.00 மணி முதல் பார்வையிடலாம்.ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Updated On: 27 March 2022 2:22 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்