/* */

பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் இருவர் கைது

11வழக்குளில் சம்பந்தப்பட்ட ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது

HIGHLIGHTS

பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களுடன் அவர்களை பிடித்த போலீசார் உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற குற்ற வழக்குகளை கண்டறிய திருச்சி மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் அறிவுறுத்தலின்படியும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆணையின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அரியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரியலூர் நகரத்தில் உள்ள அண்ணா விளையாட்டரங்கம் அருகே நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 6,500/- கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் அரியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உடனடியாக சம்பந்தப்பட்ட எதிரிகளை பிடிக்க மேற்கண்ட உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் மேற்பார்வையில் அரியலூர் காவல் ஆய்வாளர் கோபிநாத், கீழப்பழூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு மற்றும் திருமானூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட எதிரிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

இன்று அரியலூர் அம்மாகுளம் பிரிவு சாலை அருகே அரியலூர் காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் திருமானூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜவேல் ஆகியோர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, மேற்கண்ட கொள்ளை வழக்கில் புகார்தாரர் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த முனியாண்டிராஜா என தெரியவந்தது.

அவர்களை விசாரித்தபோது அரியலூர் அண்ணா விளையாட்டரங்கம் அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ. 6,500/- கொள்ளையடிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்களை மேலும் விசாரித்து வாக்கு மூலம் பதிவு செய்தபோது மேற்படி கொள்ளையர்கள் இருவரும் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டு வழக்குளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அரியலூர், கயர்லாபாத், கீழப்பழூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவர்கள் வழிப்பறி, கண்ணக்களவு திருட்டு, மற்றும் இருசக்கர வாகன திருட்டு உள்ளடக்கிய சுமார் 10 வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.


மேலும் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் , மீன்சுருட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்ணக்களவு திருட்டு மற்றும் இருசக்கர வாகன திருட்டு உள்ளடக்கிய சுமார் 11 வழக்குளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 70 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களை அரியலூர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சில வழக்குகளில் திருடப்பட்ட நகைகள் சென்னையில் உள்ள அட்டிகா கோல்டு கம்பெனியில் விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

மேற்படி நிறுவனம் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு நல்காததால் நீதிமன்றம் மூலம் மேற்படி திருட்டு நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட வழக்குகள் தொடர்பான கொள்ளையர்களை பிடித்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்ட தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.

Updated On: 9 Oct 2022 6:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்