/* */

செந்துறை சமத்துவபுரம் மறுசீரமைப்பு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

செந்துறை சமத்துவபுரம் மறுசீரமைப்புப்பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு.

HIGHLIGHTS

செந்துறை சமத்துவபுரம் மறுசீரமைப்பு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
X

செந்துறை சமத்துவபுரம் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவபுரம் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை கிராம ஊராட்சி சமத்துவபுரத்தில் 100 வீடுகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த சமத்துவபுரத்தை சீரமைக்கவும், அவற்றின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சமத்துவபுரத்தினை இன்றைய தினம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், சமத்துவபுரத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால் சீரமைத்தல், சமுதாயக்கூடம் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதியதாக மயானம் அமைத்துத்தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சமத்துவபுரத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 15 April 2022 6:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  3. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  5. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  8. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  9. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  10. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...